Transliteration
Ragam: Abhang Mettu
Thalam: Adi
Pallavi
nAmAvai pAduvom hari
nAmAvai pAduvom!
Pallavi
hari nAmAvai prabhu nAmAvai
vittala nAmAvai pAduvom!
Charanam
mandiram thandiram yandiram yedarkkum vasappadave maattaan
(hari) nAmA solli kadari azhaitthAl thAngavum mAttAn….. (hari nAmAvai…)
pattam padhavi paNam ivai yedhayum pArkave mAttAn
(hari) bhakti mattum irundhu vittAl mayangiye viduvAn… (hari nAmAvai…)
pAvam puNNiyam dharmam yendra kavalaiye illaye
(hari) nAmA ondru irundhu vittAl karai yettri viduvAn… (hari nAmAvai…)
annai thandhai AsAn ellAm enakku avan thAne
muraLIdharanukku ulagil yendrum kavalaye illaye… (hari nAmAvai…)
Original Kirtan
ராகம்: அபங்கமெட்டு
தாளம்: ஆதி
பல்லவி
நாமாவை பாடுவோம் ஹரி
நாமாவை பாடுவோம்!
அனுபல்லவி
ஹரி நாமாவை ப்ரபு நாமாவை
விட்டல நாமாவை பாடுவோம்!
சரணம்
மந்திரம் தந்திரம் யந்திரம் எதற்கும்
வசப்படவே மாட்டான் !
(ஹரி) நாமா சொல்லி கதரி அழைத்தால் தாங்கவும் மாட்டான்.. (ஹரி
நாமாவை)
பட்டம் பதவி பணம் இவை எதையும்
பார்கவே மாட்டான்
(ஹரி) பக்தி மட்டும் இருந்து விட்டால்
மயங்கியே விடுவான் (ஹரி னாமாவை)
பாவம் புண்யம் தர்மம் என்ற
கவலையே இல்லயே
(ஹரி) நாமா ஒன்று இருந்து விட்டால்
கரையேற்றி விடுவான் (ஹரி நாமாவை)
அன்னை தந்தை ஆசான் எல்லாம்
எனக்கு அவன் தானே
முரளீதரனுக்கு உலகில் என்றும்
கவலையே இல்லயே (ஹரி நாமாவை)