Transliteration
Ragam: Sama
Thalam: Adi
uLLe pAr uLLe pAr
uLLe pAr gnAnathangame!
uLLe pArkka mudiyAvittAl
veLiye kaNNanai pAr pAr pAr! (uLLe pAr)
pesAdiru pesAdiru
pesAdiru gnAnathangame!
pesAdirukka mudiyAvittAl
kaNNanai patriye pesiyiru! (uLLe pAr)
uNNAdhiru uNNAdhiru
uNNAdhiru gnAnathangame!
uNNAdhirukka mudiyAvittAl
kaNNan amudhu seitathai uNdidu! (uLLe pAr)
keLAdhiru keLAdhiru
keLAdhiru gnAnathangame!
keLAdhirukka mudiyAvittAl
kaNNanin keLikkaigaLai kettu iru! (uLLe pAr)
alayAthiru alayAthiru
alayAthiru gnAnathangame!
alaivatharkkAsai irukkumAnAl (uLLe pAr)
kaNNan Alayam selvAye!
vazhi idhuve vazhi idhuve
vazhi idhuve gnAnathangame!
vizhippudan vazhuvAmal irundhu nI
muktiyai thazhuvikkoLvAye! (uLLe pAr)
Original Kirtan
ராகம்: ஸாமா
தாளம்: ஆதி
உள்ளே பார் உள்ளே பார்
உள்ளே பார் ஞானத்தங்கமே !
உள்ளே பார்க்க முடியாவிட்டால்
வெளியே கண்ணனைப் பார் பார் பார்! (உள்ளே பார்)
பேசாதிரு பேசாதிரு
பேசாதிரு ஞானத்தங்கமே!
பேசாதிருக்க முடியாவிட்டால்
கண்ணனைப் பற்றியே பேசியிரு! (உள்ளே பார்)
உண்ணாதிரு உண்ணாதிரு
உண்ணாதிரு ஞானத்தங்கமே!
உண்ணாதிருக்க முடியாவிட்டால்
கண்ணன் அமுது செய்ததை உண்டிரு! (உள்ளே பார்)
கேளாதிரு கேளாதிரு
கேளாதிரு ஞானத்தங்கமே!
கேளாதிருக்க முடியாவிட்டால்
கண்ணனின் கேளிக்கைகளைக் கேட்டு இரு! (உள்ளே பார்)
அலையாதிரு அலையாதிரு
அலையாதிரு ஞானத்தங்கமே!
அலைவதற்கு ஆசை இருக்குமானால்
கண்ணன் ஆலயம் செல்வாயே ! (உள்ளே பார் )
வழியிதுவே வழியிதுவே
வழியிதுவே ஞானத்தங்கமே!
விழிப்புடன் வழுவாமலிருந்து
நீ முக்தியைத் தழுவிக்கொள்வாயே! (உள்ளே பார்)