Porumaiyum Karunaiyum…

 

| Open Player in New Window

 

Transliteration

rAga: asAveri
thala: Adi

Pallavi

porumaiyum karuNaiyum thavamum serndhu
or uru koNdadho ashoka vanathil             (porumaiyum )

Anupallavi

porumaiyil unakku nigaruNDo sIthe – en
arumai rAmanum aDuththa paDiye         (porumaiyum )

Charanam
arakkiyar naDuve ashoka vanathil
Iraindhu mAthangaL eppaDi irunthAi
karpin pizhambe rAmanin kaNmaniye
arputham arputham un charitam    (porumaiyum)

aparAdham ariyAdha athishaya kaNgaLo
aparAdham ninaikkAdha vichitra manamo
thyAgathilum idhu enna thyAgam
dhIran rAmanum unakku nigaro!        (porumaiyum )

anjani putran anjali seithavaLe
chanchalam illAtha chittham udaiyavaLe
anjum thIyil pAyinthavaLe
thanjam aDainthen aparAdhi     (porumaiyum)

Original Kirtan

ராகம் : அசாவேரி
தாளம் : ஆதி

பல்லவி

பொறுமையும் கருணையும் தவமும் சேர்ந்து
ஒருருக் கொண்டதோ அசோகவனத்தில் (பொறுமை)

அனுபல்லவி

பொறுமையில் உனக்கு நிகருண்டோ சீதே
(என்) அருமை ராமனும் அடுத்தபடியே (பொறுமை)

சரணம்

அரக்கியர் நடுவில் அசோக வனத்தில்
ஈரைந்து மாதங்கள் எப்படி இருந்தாய்
கற்பின் பிழம்பே ராமனின் கண்மணியே
அற்புதம் அற்புதம் உன் சரிதம் (பொறுமை )

அபராதம் அறியாத அதிசயக் கண்களோ
அபராதம் நினைக்காத விசித்ர மனமோ
தியாகத்திலும் இது என்ன தியாகமோ
தீரன் ராமனும் உனக்கு நிகரோ ( பொறுமை )

அஞ்சனி புத்திரன் அந்சலி செய்தவளே
சஞ்சலமில்லாத சித்தமுடையவளே
அஞ்சும் தீயில் பாய்ந்தவளே
தஞ்சமடைதேன் அபராதி நானே ( பொறுமை )

Leave a reply





Copyright © 2018 Global Organization for Divinity, USA. All Rights Reserved