Bhagyam Ullore…

 

| Open Player in New Window

Transliteration

Ragam: Anandabhairavi
Thalam: Adi

Pallavi
bhAgyam uLLore vArungaL!
paranthAman pugazh pAda                 (bhAgyam)

Anupallavi
sakhyam udan nAm anaivarum kUdi
harikIrthanathil aikkiyam Aga          (bhAgyam)

Charanam
annai mIra sendra vazhi idhuve
arumai guruvum cheppum mozhi idhuve
taruNam idhai nIr nazhuva vidAthir
hariyin madiyil amarndhidalAme !                    (bhAgyam)

hari kIrthanathirkku nigar illai kAN
parishramam illai avanai pAda
vedatthin sAram hariyin nAmam
yedum iyyamillai idhuve thiNNam !            (bhAgyam)

oraNiyil nAm anaivarum kUdi
dharaNi thannil avan pugazh pAda
kALameghamum kettu maghizha
muraLIdharanum paNindhu nindrAn!          (bhAgyam)

Original Kirtan

ராகம் :ஆனந்தபைரவி
தாளம் : ஆதி

பல்லவி
பாக்யம் உள்ளோரே வாருங்கள்
பரந்தாமன் புகழ் பாட ( பாக்யம் )
அனுபல்லவி
சக்யமுடன் நாம் அனைவரும் கூடி
ஹரி கீர்தனத்தில் ஐக்யம் ஆக ( பாக்யம் )
சரணங்கள்
அன்னை மீரா சென்ற வழி இதுவே
அருமை குருவும் செப்புமொழி இதுவே
தருணம் இதை நீர் நழுவவிடாதீர்
ஹரியின் மடியில் அமர்ந்திடலாமே ( பாக்யம்)
ஹரி கீர்த்தனத்திற்கு நிகரில்லை காண்
பரிச்ரமம் இல்லை அவனைப் பாட
வேதத்தின் சாரம் ஹரியின் நாமம்
ஏதும் ஐயம் இல்லை இதுவே திண்ணம் ( பாக்யம் )
ஓரணியில் நாம் அனைவரும் கூடி
தரனி தன்னில் அவன் புகழ் பாட
காளமேகமும் கேட்டு மகிழ
முரளீதரனும் பணிந்து நின்றான் ( பாக்யம் )

Leave a reply





Copyright © 2018 Global Organization for Divinity, USA. All Rights Reserved