Transliteration
Raga: Kanada
Tala: Adi
Pallavi
krushNa krushNa krushNa endRu sollikkoDuththAL
thAn vaLarkkum kiLiyiDam rAdhai (krushNa)
Charanam
nAradar thanakkum sonna mandhiraththai
kuralinil inimai kUTTi kuzhaivAgavE (krushNa)
pAlinum suvaiyAnadhu thEnilum inimaiyAnadhu
Alai karumbu rasam pOl thiththiththiruppadhu (krushNa)
thOLil amarndha kiLi rAdhaiyin kAthinil
manthiraththai uraiththiDa mUrchchaiyAnAL (krushNa)
Original Kirtan
க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண என்று சொல்லிக்கொடுத்தாள்
தான் வளர்க்கும் கிளியிடம் ராதை
நாரதர் தனக்கும் சொன்ன மந்திரத்தை
குரலினில் இனிமை கூட்டி குழைவாகவே
பாலினும் சுவையானது தேனிலும் இனிமையானது
ஆலை கரும்பு ரஸம் போல் தித்தித்திருப்பது
தோளில் அமர்ந்த கிளி ராதையின் காதினில்
மந்திரத்தை உரைத்திட மூர்ச்சையானாள்