Transliteration
Raga: Senjuritti
Tala: Adi
Pallavi
nija vaikuNThaththai vittu bhUvaikuNTham vandha
kAraNam ennavO vitThalA ?
Anupallavi
bhaktargaL engaLukkO vaikuNTham vara Asai
bhagavAn unakkO bhUmikku vara Asai (nija)
Charanam
nAma kIrththanaththiRkku Engi vandhAyO
bhImA nadikkarai thEdi vandhAyO
ramAvayum udan nI azhaiththu vandhAyO
umApathi amsamAi thOndRi nindRAyO (nija)
Original Kirtan
ராகம் – செஞ்சுருட்டி
நிஜ வைகுண்டத்தை விட்டு பூ வைகுண்டம் வந்த
காரணமென்னவோ விட்டலா
பக்தர்கள் எங்களுக்கோ வைகுண்டம் வர ஆசை
பகவான் உனக்கோ பூமிக்கு வர ஆசை
நாமகீர்தனத்திற்கு ஏங்கி வந்தாயோ
பீமா நதிக்கரைத் தேடி வந்தாயோ
ராமாவையும் கூட நீ அழைத்து வந்தாயோ
உமாபதி அம்சமாய் தோன்றி நின்றாயோ