Transliteration
Raga: Abhogi
Tala: Adi
Pallavi
piRavi adainthathin payanai nAn ip
piRaviyilEyE adainthida aruLida vENdum – kaNNA manidha (piravi)
Anupallavi
aridAgilum pirithondRum nAn vENdEn
murahara nakadara mukundha gOvinda (piRavi)
Charanam
hariyAna unakku aridAnadhu uLathO
sari nigar samAnamillAdha dheivam andRO nI
parimugam kkoNda pramikavarada
karirAja varada nArAyanA harE (piravi)
Original Kirtan
பல்லவி
பிறவி அடைந்ததின் பயனை நான் இப்-
பிறவியிலேயே அடைந்திட அருளிட வேண்டும் -கண்ணா மனித (பிறவி)
அனுபல்லவி
அரிதாகிலும் பிரிதொன்றும் நான் வேண்டேன்
முரஹர நகதர முகுந்த கோவிந்த (பிறவி)
சரணம்
ஹரியான உனக்கு அரிதானது உளதோ
ஸரி நிகர் ஸமானமில்லாத தெய்வம் அன்றோ நீ
பரிமுகம் கொண்ட ப்ரேமிக வரத
கரிராஜ வரத நாராயணா ஹரே (பிறவி)