ராதே ராதே
குருஜியின் திருவருளால், இன்று வர்ஜினியா, ரிச்மண்ட் நகரத்தில் முதல் சத்சங்கம் நடை பெற்றது.
சுமார் 35 பேர் கலந்து கொண்டனர். திரு ராமுஜி அவர்கள் பக்தி மார்கம் மற்றும் நாம மகிமையை எளிமையான ஆங்கிலத்தில் விரிவாக
விளக்கினார். கடவுளின் அன்பிற்கு எப்படி ஆட்படுவது என்பதை அருமையான பல உதாரணங்கள் மூலம் விளக்கினார். மகிழ்ச்சி என்பது
எது, அதைப் பெறும்போது ஒருவரின் மனநிலை என்ன, அந்த மகிழ்ச்சியை ஆனந்தமாக்குவது நாம கீர்த்தனமே என்பதையும் விளக்கினார்.
கலந்து கொண்ட அனைவருக்கும் பக்தியில் ப்ராணாயாமத்தின் பங்கு என்ன என்பதை விளக்கி, எளிய ப்ராணாயாமம் செய்யும் முறைகளை
பயிற்றுவித்தார். ஹரே ராமா மஹா மந்திரம் சொல்ல வேண்டிய வழிகளை விளக்கி அனைவரையும் இம் மஹாமந்திரத்தை அனுதினமும்
சொல்லும்படி வேண்டிக்கொண்டு இன்றைய சத் சங்கத்தை நிறைவு செய்தார்.
— முரளி
I like satsangam very nice every day sri sri swamiji they bless yours
ratha ratha